பக்கம்:சைவமும் தமிழும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it, சைவ சமய விளக்கு பொது, சிறப்பு என்பதன் கருத்து தெளிவாகும். இம் முறையில் திருக்குறள் பொதுநூல்; திருமுறைகள் சிறப்பு நூல் என்பது தெளிவாகும். அன்பன், கார்த்திகேயன். ද්‍රි அன்புநிறைந்த கண்ணுதலப்பனுக்கு, - நலன். நலனே விளைக. இக்கடிதத்தில் சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு எவை என்பதையும் அவற்றின் ஆசிரியர்களையும் சுருக்கமாக விளக்குவேன். 1. திருவுந்தியார், 2. திருக்களிற்றுப் பாடியார், 3. சிவஞான போதம், 4. சிவஞான சித்தியார், 5. இருபா இருபஃது, 6. உண்மை விளக்கம், 7. சிவப்பிரகாசம், 8. திருவருட் பயன், 9. வினா வெண்பா, 10. போற்றிப் பஃறொடை வெண்பா, 11. கொடிக் கவி, 12. நெஞ்சுவிடு துரது. 13. உண்மைநெறி விளக்கம், 14. சங்கற்ப திரா கரணம் என்ற பதினான்கும் சித்தாந்த சாத்திரங்களாகும். இவற்றை, உந்தி களிறே உயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்த அருள் பண்புவினா போற்றிகொடி பாசமீலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்பம் உற்று. என்ற பழைய வெண்பா ஒன்று பட்டியலிட்டுக் காட்டு கின்றது. நூல்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் நூலாசிரியர்களைப் பற்றி அறிந்துகொள்வது இன்றியமை பாததாகின்றது. திருப்புக்தியார் () என்ற நூலை அருளிச்