பக்கம்:சைவமும் தமிழும்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 சைவமும் தமிழும் பிாயப்புலி(2): என்று தொடங்கும் இப்பகுதி கட்ட ளைக் கலித்துறை யாப்பாலான ஐம்பத்தொன்பது பாடல் களாலானது. வேங்கை ஒன்றைப் பிடிக்க மான்குட்டி ஒன்றைப் பார்வைமானாக அதன் முன் கட்டிவைத் திருப்பதுபோல் உலகப் பொருள்களாகிய படைக்கருவிகள் பலவற்றின்முன் தம்மைத் தனியாக நிற்க வைத்துள்ளதை எண்ணி இறைவனிடம் முறையிடுகின்றார். பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படி,அகில மாயைப் பெரும்படைக் கேஇலக் காஎனை வைத்தனையோ? நீளப் படிவகுத் தாலும்ந்ன் றே.நின் பெருங்கருணை தாய்ஒத்து அடியர்க்கு அருள்சச்சி தானந்த தற்பரமே! (1) வெளியான நீஎன் மண்வெளி யூடு வரவின்,ஐயா ஒளி.ஆரும் கண்ணும் இரவியும் போல்நின்று உலாவுவன்காண்; அளி.ஆரும் கொன்றைச் சடைஆட, அம்புலிஆடக் கங்கைத் துளிஆட, மன்றுள் நடம்ஆடும் முக்கண் சுடர்க்கொழுந்தே! (6) நீங்காது உயிருக்கு உயிர்ஆகி நின்ற நினைஅறிந்தே, தூங்காமல் தூங்கின்அல் லாதே எனக்குச் சுகமும் உண்டோ? ஓங்காரம் ஆம்ஐந்து எழுத்தால் புவனத்தை உண்டுபண்ணிப்