பக்கம்:சைவமும் தமிழும்.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 459 பாங்காய் நடத்தும் பொருளே, அகண்ட பரசிவமே! (9) வாய் உண்டு வாழ்த்த மவுனம்செய் போது மவுனஅருள் தாய்உண்டு; சேய்என்ன என்னைப் புரக்கச் சதானந்தம்.ஆம் நீஉண்டு; நின்னைச் சரண்புக நான் உண்டு;என் நெஞ்சம்ஐயா! தீஉண்டு இருந்த மெழுகுஅல வோகதி சேர்வதற்கே (21) கல்லால் எறிந்தும்கை வில்லால் அடித்தும் கனிமதுரச் சொல்லால் துதித்தும்,நல் பச்சிலை தூவியும், தொண்டர்இனம் எல்லாம் பிழைத்தனர்; அன்பு:அற்ற நான்இனி ஏதுசெய்வேன்; கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குருமணியே! (22) ஆரணம் ஆகமம் எல்லாம் உரைத்த அருள்மவுன காரண மூலம்கல் ஆல்அடிக் கேஉண்டு; காணப்பெற்றால், பார்அணங் கோடு சுழல்நெஞ்சம் ஆகிய பாதரசம் மாரண மாய்விடும்; எண்சித் முக்தியும் வாய்த்திடுமே (25) சித்த மவுணி, வடபால் மவுனி,நம் தீயகுண்ட சுத்த மவுனி எனும்மூவ ருக்கும் தொழும்புசெய்து,