பக்கம்:சைவமும் தமிழும்.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 சைவமும் தமிழும் சத்த மவுன முதல்மூன்று மெளனமும் தான்படைத்தேன்; நித்த மவுனம்.அல் லால்அறி யேன்மற்றை நிட்டைகளே. (26) அழுக்குஆர்ந்த நெஞ்சுஉடை யேனுக்கு,ஐ யாநின் அருள்வழங்கின் இழுக்குஆகும் என்றுஎண்ணி யோஇரங் காத இயல்புகண்டாய்; முழுக்காதல் ஆகி, விழிநீர் பெருக்கிய முக்தர்எனும் குழுக்கான நின்று, நடம்ஆடும் தில்லைக் கொழுஞ்சுடரே! (34) அல்லும் பகலும் உனக்கே அபயம் அபயம்என்று சொல்லும்சொல் இன்னம் தெரிந்தது.அன் றோ?துதிப் பார்கள்மனக் கல்லும் கரைக்கும் மவுனா ! உனது கருனைஎன்பால் செல்லும் பொழுதுஅல்ல வோசெல்லு வேன்;அந்தச் சிற்ககத்தே (44) ஆடும் கறங்கும் திரிகையும் போல அலைந்துஅலைந்து காடும் கரையும் திரிவதுஅல் லால்,நின் கருணைவந்து கூடும் படிக்குத் தவம்முய லாத கொடியர்,எமன் தேடும் பொழுதுஎன்ன செய்வார்? பரமானந்த சிற்சுடரே! (56)