பக்கம்:சைவமும் தமிழும்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 461 பாடல்களைக் கருத்துன்றிப்படித்தால் அருணகிரி யாரின் கந்தர் அலங்காரத்தின் செல்வாக்கை இதில் கண்டு மகிழலாம். உடல் பொய்யுறவு(28): இப்படித்தொடங்கும் இப்பகுதி எண்பத்து மூன்று நேரிசை வெண்பாக்களால் ஆனது. இதில் தாம் அறிந்தவை யாவும் மோன குருவினிடமிருந்தே என்று குறிப்பிடுகின்றார். சில பாடல்கள்: உடல்,பொய் உறவுஆயின் உண்மைஉறவு ஆகக் கடவார்.ஆர்? தண்அருளே கண்டாய்;-திடமுடனே உற்றுப்பார்; மோனன்.ஒருசொல்லே உண்மை; நன்றாய்ப் பற்றிப்பார்; மற்றெல்லாம் பாழ் - (1) சகம்.அனைத்தும் பொய்எனவே தான்உணர்ந்தால், துக்க சுகம்அனைத்தும் பொய் அன்றோ? சோராது -இகபரத்தும் விட்டுப் பிரியாத மேலான அத்வைதக் கட்டுக்குள் ஆவதுஎன்றோ? காண். (6) இகம்முழுதும் பொய்எனவே ஏய்ந்துஉணர்ந்தால், ஆங்கே மிகவளர வந்தஅருள் மெய்யே; -அகம்நெகிழப் பாரீர்; ஒருசொல் படியே அநுபவத்தை சேரீர்; அதுவே திறம் - (10) கல்லேறும் சில்லேறும் கட்டியே றும்போலச் சொல்றைப் பாழ்த்த துளைச்செவிகொண்டு-அல்ஏறு நெஞ்சன்என நிற்கவைத்தாய்; நீதியோ? தற்பரமே! வஞ்சன் அல்லேன்நீயே மதி. - (15) மனத்தாலும் வாக்காலும் மன்னஒண்ணா மோன இனத்தாரே நல்ல இனத்தார்;-கனத்தபுகழ் கொண்டவரும் அன்னவரே கூறரிய முக்திநெறிக் கண்டவரும் அன்னவரே காண். (20)