பக்கம்:சைவமும் தமிழும்.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 - சைவமும் தமிழும் சொல்லுக்கு அடங்காச் சுகப்பொருளை, நாம்எனவே அல்லும் பகலும் அரற்றுவதுஎன்?-நல்லசிவ ஞானமயம் பெற்றோர்கள் நாம்இல்லை என்பர்;அந்தோ மோனமயம் ஆன முறை ... " (25) ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்ஆக ஒர்சொல் விளம்பினர்யார்?-வையத்தோர் சாற்றரிதுஎன்று ஏசற்றார்; தன்அணையாய், முக்கண்ணந்தை நாற்றிசைக்கும் கைகாட்டி னான் (26) தத்துவப்பே யோடே தலை அடித்துக் கொள்ளாமல் வைத்த அருள்மோன வள்ளலையே-நித்தம்அன்பு பூணக் கருதும்நெஞ்சு போற்றக் கரம்எழுப்பும்; காணத் துடிக்கும்இரு கண். (29) அல்லும் பகலும்பே ரன்புடனே தான்இருந்தால் கல்லும் உருகாதோ! கல்நெஞ்சே! -பொல்லாத தப்புவழி ஏன்நினைத்தாய்? சந்ததமும் நீஇறந்த எய்ப்பிலே ஆனந்த மே. (40) கம்மா இருக்கச் சுகம்.உதயம் ஆகுமே; இம்மாயா யோகம்இனி ஏன்அடா? -தம்அறிவின் கட்டாலே ஆகுமோ? சொல்லவேண் டாம்;கன்ம நிட்டா; சிறுபிள்ளை நீ! - 3. (52) அவனே பரமும்; அவனே குருவும்: அவனே அகிலம் அனைத்தும்; அவனேதாம் ஆனவரே சொன்னால்; அவரே குருஎனக்கு; நான்.அவனாய் நிற்பதுஎந்த நாள்? (63) ஞானநெறிக்கு ஏற்றகுரு நண்ணரிய சித்திமுக்தி தானம் தருமம் தழைத்தகுரு-மானமொடு தாய்எனவும் வந்துஎன்னைத் தந்தகுரு என்சிந்தை கோயில்என வாழும் குரு. (82)