பக்கம்:சைவமும் தமிழும்.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 463 கற்புறுசிந்தை (36): "பூரணானந்த வாழ்வே' என் இறும் பத்து அறுசீர் விருத்தங்களால் ஆனது இப்பகுதி, முதல் பாடலின் முதல் தொடரைத் தலைப்பாகக் கொண் டது. இதில் கற்புறு மனைவியைப்போல் இறைவனையே தலைவனாகக் கொண்டு பெண்ணின் பேரின்பம் என்னும் உலகாயதத்திலிருந்து விடுபட்டு இறையருளைப் பெற்று உய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பெறுகின்றது. கற்புறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறுஒர் இல்புறத் தவரை நாடார்; யாங்களும் இன்ப வாழ்வு தன்பொறி ஆக நல்கும் தலைவநின் அலது,ஓர் தெய்வம் பொற்புறக் கருதோம் கண்டாய்; பூரணா னந்த வாழ்வே! (1) எண்ணிய எண்ணம் எல்லாம் இறப்புமேல் பிறப்புக்கு ஆசை பண்ணிஎன் அறிவை எல்லாம் பாழ்ஆக்கி, எனைப்பாழ் ஆக்கும் திண்ணிய வினையைக் கொன்று, சிறியனை உய்யக் கொண்டால் புண்ணியம் நினக்கே அன்றோ பூரணா னந்த வாழ்வே! (5) கண்ணிகள் (1) பராபரக்கண்ணி (43): இத்தலைப்பின்கீழ் 389 கண்ணிகள் அமைந்துள்ளன. அனைத்தும் பாமரமக்களின் கவனத்தை ஈர்ப்பதோடன்றி படித்தவர்களையும் சிந்திக்க வைக்கும் பான்மையன. இவற்றுள் சில: -