பக்கம்:சைவமும் தமிழும்.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 சைவமும் தமிழும் உரைஇறந்த அன்பர்உளத்து ஒங்குஒளியாய் ஓங்கிக் கரை இறந்த இன்பப் பெருக்கே பராபரமே (6) ஒடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருள்.ஆன நட்பே பராபரமே (16) என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்து - அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே (21) அன்னை இலாச்சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ஆர என்அகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே (57) எவ்வுயிரும் என்உயிர்போல் எண்ணி இரங்கவும்நின் தெய்வ அருள்கருணை செய்யாய் பராபரமே (65) நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே (151) கொல்லா விரதம்ஒன்று கொண்டவரே நல்லோர்மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே (192) . எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறுஒன்று அறியேன் பராபரமே (221) ஐவரொடும் கூடாமல் அந்தரங்க சேவைதந்த - தெய்வ அறிவே சிவமே பராபரமே (252) பக்தர் அருந்தும் பரமசுகம் யான்அருந்த எத்தனைநாள் செல்லும் இயம்பாய் பராபரமே (270) பேசாத மோனநிலை பெற்றுஅன்றோ நின்அருள்.ஆம் வாசாம் அகோசரம்தான் வாய்க்கும் பராபரபமே (284) அத்வைதம் ஆன அயிக்ய அநுபவமே சுத்தநிலை அந்நிலையார் சொல்வோர் பராபரமே (293) அண்டபகி ரண்டம் அறியாத நின்வடிவைக் கண்டவரைக் கண்டால் கதிஆம் பராபரமே (323)