பக்கம்:சைவமும் தமிழும்.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 465 சிந்தை மயக்கம்அறச் சின்மயமாய் நின்றஉன்னைத் தந்தஉனக்கு என்னையுந்தான் தந்தேன் பராபரமே (329) மோனம் தரும்ஞானம் ஊட்டி எனக்குஉவட்டா ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே - (345) உருவெளிதான் வாதவூர் உத்தமர்க்குஅல் லால்இனமும் குருவழிநின்றார்க்கும்.உண்டோ கூறாய் பராபரமே (356) உள்ளம் குழைய உடல்குழைய உள்இருந்த கள்ளம் குழையஎன்று காண்பேன் பராபரமே (361) தத்துவம்எல் லாம்.அகன்ற தன்மையர்க்குச் சின்மயம்ஆம் நித்தமுக்த சுத்த நிறைவே பராபரமே (367) கல்லாதேன். ஆனாலும் கற்றுஉணர்ந்த மெய்யடியார் சொல்லாதே நின்னைத் தொடர்ந்தேன் பராபரமே (383) முத்திக்கு வித்துஆன மோனக் கரும்புவழி தித்தித் திடவிளைந்த தேனே பராபரமே (385) மண்ணும் மறிகடலும் மற்றுளவும் எல்லாம்உன் கண்ணில் இருக்கவும்.நான் கண்டேன் பராபரமே (387) (2) பைங்கிளிக்கண்ணி (44): ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்ககம்தான் பாவிக்கும் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே (3) ஆரும் அறி யாமல்என்னை அந்தரங்கம் ஆகவந்து சேரும் படிஇறைக்குச் செப்பிவா பைங்கிளியே (4) உன்னாமல் ஒன்றுஇரண்டுஎன்று ஒராமல் வீட்டுநெறிக் சொன்னான் வரவும்வகை சொல்லாய்நீ பைங்கிளியே (7) ஊரும்இலார் பேரும்இலார் உற்றார்பெற் றாருடனே யாரும்இலார் என்னை அறிவாரோ பைங்கிளியே (8) 3. இத்தலைப்பில் 88 கண்ணிகள் உள்ளன. சை.த-30