பக்கம்:சைவமும் தமிழும்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 சைவமும் தமிழும் எந்தமட லூடும் எழுதா இறைவடிவைச் சிந்தைமட்லில்எழுதிச்சேர்ப்பேனோபைங்கிளியோ () கண்டதனைக் கண்டு கலக்கம் தவிர்எனவே விண்டபெருமானையும்நான் மேவுவனோ பைங்கிளியே (15) காந்தம் இரும்பைக் கவர்ந்து இழுத்தால் என்ன அருள் வேந்தன் எமைஇழுத்து மேவுவனோ பைங்கிளியே (17) சொல்லிறந்து நின்ற சுகரூபப் பெம்மானை அல்லும் பகலும் அணைவேனோ பைங்கிளியே (24) தாவியதுஓர் மர்க்கடமாம் தன்னைவிட்டே அண்ணலிடத்து ஒவியம்போல் நிற்கின்னனை உள்குவரோ பைங்கிளியே - - (28) தொல்லைக் கவலை தொலைத்துத் தொலையாத எல்லைஇலா இன்பமயம் எய்துவனோ பைங்கிளியே (31) நீர்க்குமிழி போன்றஉடல் நிற்கையிலே சாசுவதம் சேர்க்க அறி யாமல் திகைப்பேனோ பைங்கிளியே (34) மண்உறங்கும் விண்உறங்கும் மற்றும் உளன லாம்.உறங்கும் கண்உறங்கேன் எம்இறைவர் காதலால் பைங்கிளியே (44) விண்ணவர்தம் பால்.அமுதம் வேப்பங்காய் ஆகஎன்பால் பண்ணியது.எம் அண்ணல்மயல் பார்த்தாயோ பைங்கிளியே (52) உள்ளத்தின் உள்ளே ஒளித்துஇருந்துஎன் கள்ளமெல்லாம் வள்ளல்அறிந் தால்எனக்கு வாயும் உண்டோ - பைங்கிளியே (55) ஆகத்தை நீக்கும்முன்னே ஆவித் துணைவரைநான் தாகத்தின் வண்ண்ம் தழுவுவனோ பைங்கிளியே (56) கள்ளத் தலைவர்.அவர் கைகாட்டிப் பேசாமல் உள்ளத்தில் வந்த உபாயம் என்னோ பைங்கிளியே (58)