பக்கம்:சைவமும் தமிழும்.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 467 (3) எந்நாட்கண்ணி (45): இதில் தெய்வ வணக்கம், குருமரபின் வணக்கம், அடியார் வணக்கம், யாக்கையைப் பழித்தல், மாதர் மயக்குஅறுத்தல், தத்துவமுறைமை, தன் உண்மை, அருள்.இயல்பு, பொருள் இயல்பு, ஆனந்த இயல்பு, அன்பு நிலை, அன்பர்நெறி, அறிஞர் உரை, நிற்கும் நிலை, நிலைபிரிந்தோர் கூடுவதற்கு உபாயம் என்ற பதினைந்து தலைப்புகளில் கண்ணிகள் உள்ளன. ஒரு சில தலைப்பு களில் மாதிரிக்கு ஒரு சில கண்ணிகளைக் காண்போம். (i) தெய்வ வணக்கம் ஆறுசம யத்தும் அது அதுவாய் நின்றுஇலங்கும் வீறு பரைத்திருத்தாள் மேவுநான் எந்நாளோ? (5) ஆதிஅந்தம் காட்டாது அகண்டிதமாய் நின்று உணர்த்தும் போதவடிவு ஆம்அடியைப் போற்றுநாள் எந்நாளோ (8) அஞ்சுமுகம்காட்டாமல் ஆறுமுகம் காட்டவந்த செஞ்சரணச் சேவடியைச் சிந்தைவைப்பது எந்நாளோ? (10) தந்தைஇரு தாள்துணித்துத் தம்பிரான் தாள்சேர்ந்த எந்தைஇரு தாள்.இணைக்கே இன்புறுவது எந்நாளோ? (11) (ii) குருமரபின் வணக்கம் - பொய்கண்டார் காணாப் புனிதம்எனும் அத்வைத மெய்கண்ட நாதன் அருள் மேவுநாள் எந்நாளோ? (4) பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்தம் ஆகஉண்மை சாதித்தார் பொன்அடியைத் தாள்பணிவது எந்நாளோ (5): சிற்றம் பலம்மன்னும் சின்மயர்ஆம் தில்லைநகர்க் கொற்றங் குடிமுதலைக் கூறுநாள் எந்நாளோ? (6) (iii) அடியார் வணக்கம் பித்தர்இறை என்றுஅறிந்து பேதைபால் தூதுஅனுப்பு வித்த தமிழ்ச்சமர்த்தர் மெய்புகழ்வது எந்நாளோ? (3)