பக்கம்:சைவமும் தமிழும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் § { செய்தவர் திருவியலூர் உய்யவந்த தேவனார் என்பார். இவர் மாணாக்கர் திருவிய ஆர் ஆளுடைய தேவ நாயனார். இவர் மாணாக்கராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாரே திருக்களிற்றுப் படியார் (2) என்ற நூலை அருளிச் செய்தார். இது திருவுந்தியாரின் பொருளை இனிது விளக்கும் வழி நூலாக அமைகின்றது. இந்த நூலைப்பற்றிய ஒரு வரலாறு உண்டு. அதனையும் நீ அறிந்துகொள்ள வேண்டும். - நூலாசிரியர் ஆட்டு வானியக் குலத்தில் தோன் றியவர். இக்காரணம்பற்றி இவர்தம் மெய்யுணர்வு நூலை ஏற்றுக்கொள்ளச் சிலர் ஐயுற்றனர். சிவதிக்கை பெற்ற பின்னர் ஒரு வரை உலகியல் குலம்பற்றி உளங் கொண்டு வேறுபாடு கருதுதல் உண்மைச் சிவநெறிக்கு ஒரு சிறிதும் ஒவ்வாது என்ற உண்மையை அறியாதவர்கள் இவர்கள். இதன் பெருமையை அறியும் பொருட்டு இந்நூல் திருச்சிற்றம்பலத்தின் கண் அம்மை-அம்பல வர்ணர் திருமுன் காணப்படும் திருக்களிற்றுப் ப டி யார்’ என்னும் திருப்படியில் வைக்கப் பெற்றது. அம்பலவாணரின் திருவருளால் அப் படியொடு பொருந்திய கல்லாலமைந்த களிற்றுக்கை எனப்படும் தும் அடைக் கை துர்க்கி அம்பலவாணர் திருவடியில் வைத்தது. இக்காட்சியினைக் கண்டோர் வியப்பெய்தினர். நூலினைத் தலைமேற் கொண்டு போற்றினர். இமமுறையால் இந்நூலுக்குத் "திருக்களிற்றுப் படியார் என்னும் திருப்பெயர் வழங்க லாயிற்று. - திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி' மாணிக்கவாசகர் என்ற சமய குரவர் நால்வருக்குப்பின் சைவ சமயத்தை தழைத்தோங்கச் செய்வதற்குத் தமிழ் நாட்டில் பல ஞான சந்தானங்கள் தோன்றின. பழமை யாகவே "திருமூலர் மரபு என்ற ஒரு சந்தானம் பேசப் பெறுகின்றது. தாயுமான அடிகளும் தமது குருநாதராகிய மெளனகுருவை மூலன் மரபில் வருபவராகவே கொண்