பக்கம்:சைவமும் தமிழும்.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 சைவமும் தமிழும் போதவூர் நாடுஅறியப் புத்தர்தமை வாதில் வென்ற வாதவூர் ஐயன்.அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ? (4) ஒட்டுடன் பற்றுஇன்றி உலகைத் துறந்தசெல்வப் பட்டினத்தார் பத்திரகிரி பண்புஉணர்வது எந்நாளோ? s) சக்கர வர்த்தி தவராச யோகிஎனும் - மிக்கதிரு மூலன்அருள் மேவுநாள் எந்நாளோ? (7) (v) மாதர் மயக்குஅறுத்தல் - திண்ணியநெஞ் சப்பறவை சிக்கக் குழல்காட்டில் கண்ணிவைப்போர் மாயம் கடக்குநாள் எந்நாளோ? (2) காமனைவா என்றுஇருண்ட கண்வலையை வீசுமின்னார் நாமம் மறந்துஅருளை நண்ணுநாள் எந்நாளோ? (4) விங்கித் தளர்ந்து விழும்முலையார் மேல்வீழ்ந்து தூங்கும்மதன் சோம்பைத் துடைக்குநாள் எந்நாளோ?(6) உந்திச் சுழியால் உளத்தைச் சுழித்தகன தந்தி தனத்தார் தமைமறப்பது எந்நாளோ? (9) தட்டுவைத்த சேலைப்பூங் கொய்சகத்தில் சிந்தைஎல்லாம் கட்டிவைக்கும் மாயமின்னார் கட்டுஅழிவது எந்நாளோ? (10) ஏழைக் குறும்புசெயும் ஏந்திழையார் மோகமெனும் பாழைக் கடந்து பயிர்ஆவது எந்நாளோ? (13) மெய்யில் சிவம்பிறக்க மேவும்இன்பம் போல்மாதர் பொய்யில்இன்பு இன்றுஎன்று பொருந்தாநாள் எந்நாளோ? - - (15) (viii) அருள் இயல்பு பொய்க்காட்சி ஆன புவனத்தை விட்டுஅருள்.ஆம் மெய்க்காட்சி ஆம்புவனம் மேவுநாள் எந்நாளோ? (2)