பக்கம்:சைவமும் தமிழும்.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 469 ஆதிஅந்தம் காட்டாமல் அம்பரம்போ லேநிறைந்த தீதுஇல் அருட்கடலைச் சேருநாள் எந்நாளோ? (3) சூரியர்கள் சந்திரர்கள் தோன்றாச் சுயம்சோதிப் - பூரணதே சத்தில் பொருந்துநாள் எந்நாளோ? (7) எல்லாம் இறந்தஇடத்து எந்தைநிறைவு ஆம்வடிவைப் புல்லாமல் புல்லிப் புணருநாள் எந்நாளோ? (16) எக்கனும்ஆம் துன்ப இருட்கடலை விட்டுஅருள்.ஆம் மிக்ககரை ஏறி வெளிப்படுவது எந்நாளோ? (18) (ix) பொருள் இயல்பு சிந்தை மறந்து திருஅருளாய் நிற்பவர்பால் வந்தபொருள் எம்மையும்தான் வாழ்விப்பது எந்நாளோ? (8) எள்ளுக்குள் எண்ணெய்,போல் எங்கும் வியாபகமாய் உள்ளஒன்றை உள்ளபடி ஒருநாள் எந்நாளோ? (9) அடிமுடிகாட் டாதசுத்த அம்பரமாம் சோதிக் கடுவெளிவந்து என்னைக் கலக்குநாள் எந்நாளோ? (14) பெண்ஆண் அலி.எனவும் பேசாமல் என்அறிவின் கண்ணுடே நின்றஒன்றைக் காணுநாள் எந்நாளோ? (18) நினைப்பும் மறப்பும் அற நின்றபரஞ் சோதி தனைப்புலமா என்அறிவில் சந்திப்பது எந்நாளோ? (19) (:) ஆனந்த இயல்பு , - I சித்தம் தெளிந்ததோர் தெளிவில் தெளிவுஆன சுத்த சுகக்கடலுள் தோயுநாள் எந்நாளோ? (2) அண்டர்அண்ட கோடி அனைத்தும் உகாந்தவெள்ளம் கொண்டது.எனப் பேரின்பம் கூடுநாள் எந்நாளோ? (5) மண்ணுடு உழன்ற மயக்கம்எல்லாம் தீர்ந்திடவும் விண்ணுடு எழுந்தசுகம் மேவுநாள் எந்நாளே? (ff)