பக்கம்:சைவமும் தமிழும்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 3. சைவமும் தமிழும் சாட்டைஇலாப் பம்பரம்போல் ஆடும் சடகால நாட்டம்அற எந்தைகத்த ஞானவெளி காண்பேனோ? (12) பஞ்சாய்ப் பறக்கும்நெஞ்சப் பாவியைநீ கூவிஜயா 'அஞ்சாதே' என்றுஇன்னருள்செயவும் காண்பேனோ? (21) வாக்கால் மனத்தால் மதிப்புஅரியாய் நின்அருளை நோக்காமல் நோக்கிநிற்கும் நுண்ணறிவு காண்பேனோ? (26) சட்டைஒத்த இவ்வுடலைத் தள்ளுமுன்னே நான்சகச நிட்டையைப் பெற்றுஐயா நிருவிகற்பம் காண்பேனோ? (32) அண்டங்கி ரண்டம் அனைத்தும் ஒருபடித்தாக் . கண்டவர்கள் கண்டதிருக் காட்சியையும் காண்பேனோ? (34) (5 ஆகாதோ என்கண்ணி (47)5 என்னை அறிய எனக்குஅறிவாய் நின்றுஅருள்நின் தன்னைஅறிந்து இன்பநலம் சாரவைத்தால் ஆகாதோ? (2) என்அறிவுக்கு உள்ளே இருந்ததுபோல் ஐயாவே நின்அறிவுள் நின்னுடன்யான் நிற்கவைத்தால்ஆகாதோ? . - (10) ஆசைச் சுழல்கடலில் ஆழாமல் ஐயாநின் நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ? (12) விண்ஆரக் கண்ட விழிபோல் பரஞ்சோதி கண்ஆர நின்நிறைவைக் காணவைத்தால் ஆகாதோ? (16) கண்ணாடி போலஎல்லாம் காட்டும் திருவருளை உள்நாடி ஐயா உருகவைத்தால் ஆகாதோ? (18) 5. இத்தலைப்பில் 21 கண்ணிகள் உள்ளன.