பக்கம்:சைவமும் தமிழும்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 சைவமும் தமிழும் உள்ளதும் இல்லது மாய்முன்-உற்ற உணர்வது வாய்உன் உளங்கண்டது எல்லாம் தள்ளனச் சொல்லிஎன் ஐயன்-என்னைத் தான்ஆக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி -சங்கர-8 அருளால் எவையும்பார் என்றான்-அத்தை அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன் இருள்.ஆன பொருள்கண்டது அல்லால்-கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி - -சங்கர-13 விளையும் சிவானந்த பூமி-அந்த வெட்ட வெளிநண்ணித் துட்ட இருள்.ஆம் களையைக் களைந்துபின் பார்த்தேன்-ஐயன் களைஅன்றி வேறுஒன்றும் கண்டிலன் தோழி -சங்கர-15 பாடல்களின் இயல்புகள்: அடிகளார் இருமொழிப் புலமை மிக்கவராதலால் ஏராளமான வடமொழித் தொடர்களும் வடநூற்கருத்துகளும் இவர் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அருளாளர்களான மாணிக்க வாசகர், திருமூலர், போன்றவர்களின் கருத்துகளும் சொற்றொடர்களும் இவர்தம் அருளிச்செயல்களில் தலை காட்டுகின்றன. மக்கள் அன்றாட வாழ்வில் அடிபடும் பழமொழிகளும் உவமைத் தொடர்களும் ஆங்காங்கு வரவிநிற்கின்றன. - கவிதையைக் கனிவித்துச் செழுமையடையச் செய்வது அதில் பொதிந்துள்ள கற்பனை. இச்சீரிய பண்பு அடிகளா ரின் பாடல்களின் ஆங்காங்கு அமைந்துள்ளன. ஒன்றை நினைவு கூரலாம். உடல் ஒரு காடு. அக்காட்டில் வாழும் ஐம்புலன்களாகிய வேடுவர்கள் பொறிகளாகிய ஐந்து வழிகளில் வந்து நின்றுகொண்டு உயிர் என்னும் வழிப்