பக்கம்:சைவமும் தமிழும்.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 475 போக்கனை இழுத்துக் கொடிய காமமாகிய தீயிலே சுட்டு உயிருடன் தின்கின்றனர். வாயில்ஓர் ஐந்தில் புலன்னனும் வேடர் வந்துன்னை ஈர்த்துவெம் காமத் தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்னம் சிந்தைநைந் துருகிமெய்ம் மறந்து தாயிலாச் சேய்போல் அலைந்தது.அலைப் பட்டேன் . . -சிவன்செயல்-5 என்ற பகுதியில் இதனைக் காணலாம். கருத்துகளைத் தெளிவாக்குவதற்குக் கவிஞர்கட்குக் கைகொடுத்துதவுவது உவமை. இதன் நயத்தை நூலெங்கும் காணலாம். சமயத்தொடர்பான கருத்துகளை விளக்குவ தற்கு இது பெரிதும் பயன்படுவதைப் பாடல்களில் கண்டு மகிழலாம். மனம் கட்டுக்கடங்காதது. அதனை அருளாளர் கள் குரங்கோடு ஒப்பிடுவர். அடிகள் அதனைக் குரங்கு, யானை, வண்ணான், பஞ்சு, காற்றாடி, போன்றவற்றுடன் ஒப்புமை கூறி விளக்குவர். தத்துவக் கருத்துகள் இவர்தம் பாடல்களில் இழையோடுகின்றன. வேதாந்தத்தையும் சித் தாந்தத்தையும் இணைத்துக் கூறுவது இவர்தம் தனிச்சிறப்பு. தமிழ்ச் சமயவரலாற்றில் தாயுமான அடிகள் ஒரு திருப்புமுனை. சன்மார்க்கத்திற்கு வீரியவிதையிட்ட வித்தகர். அது பின்னாளில் அருட்பிரகாச வள்ளலார் வாயிலாக சுத்தசமரச சன்மார்க்கமாகச் செழித்தோங்கியது. சமய இலக்கிய வரலாற்றில் பக்திமணம் பரப்பும் சான்றோர்களில் நால்வருக்கு அடுத்து நிற்பவர் அடிகளார். இவர்தம் பாடல்கள் பக்தி இயக்கப் பெருவழியில் பல மைல்கற்கள். தமிழர் வழிபாட்டு நெறியில் பக்தியும் ஞான மும் வைராக்கியமும் இணைந்து கைகோத்துச் செல்லும் பெருவழியாகத் திகழ்கின்றன. இறைஉணர்வுப் பெருவழிக் கோர் கலங்கரை விளக்கமாகவும் அமைகின்றன.