பக்கம்:சைவமும் தமிழும்.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 சைவமும் தமிழும் 2. இராமலிங்க அடிகள் (1823–74)". (1) வரலாறு: தமிழ்நாட்டில் தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரம் வட்டம் சிதம்பரத்துக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள மருதூர் இவர்தம் பிறப்பிடம் தந்தையார் இராமையாபிள்ளை; அன்னையார் சின்னம்மாள். சமயம்-சைவம்; குலம்-வேளாண்குலம்; மர்பு-கருணிகர் மரபு. தந்தையார் கிராமக்கணக்கர். சிறார்கட்குப் பாடம் சொல்லும் கணக்காயராகவும் விளங்கினார். சின்னம்மையார் செங்கற்பட்டு மாவட்டம் பொன்னேரிக்கு அருகிலுள்ள சின்னகாவணத் தில் பிறந்து வளர்ந்தவர். இராமையபிள்ளைக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர். ஐவரும் மகப்பேறின்றி ஒருவர்பின் ஒருவராக மரிக்கவே இராமையபிள்ளை இவரை ஆறாவ தாக மணம் முடித்தார். இவர்கட்குச் சபாபதி, பரசுராமன் என்ற இரு ஆண்மக்களும் உண்ணாமுலை, சுந்தரம் என்ற இரு பெண்மக்களும் பிறந்தனர். கி.பி. 1823இல் அக்டோபர் 5 மாலை 5.30 மணி அளவில் பெற்றோருக்கு ஐந்தாவது:பிள்ளையாக அடிகள் பிறந்தார் கள். பெற்றோர் இட்ட பிள்ளைத்திருநாமம் இராமலிங்கம் என்பது, இராமையப்பிள்ளை மனைவி மக்களுடன் 1. அடிகள் தம்மை இராமலிங்க க்வாமிகள் என வழங்காமை வேண்டுமெனத் தடுத்துவிட்டனர். இதனால் வேறு செய்வதறியாது எங்ங்னம் பெருமானைச் சிறப்பித்து வழங்குவது எனச் சிந்தித்து இறுதியாக 'திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் 'இராமலிங்கம் பிள்ளை என்று வழங்கத் தொடங்கினர். இதனை நூலில் கண்ணுற்ற அடிகள் வருந்தினார். பின்னர் ஒருவாறு சமாதானப்பட்டுத் திருவருட் பிரகாசவள்ளல் ஆர்? என்று கேட்கிற இராமலிங்கம் என்று வைத்துக் கொள்ள வேண்டுமோ?” என்றருளினாராம்.