பக்கம்:சைவமும் தமிழும்.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் w 477 சிதம்பரம் சென்று நடராசப்பெருமானை வழிபட்டார். அப்போது இராமலிங்கத்தின் வயது ஐந்து திங்கள். ஆடலர சனை வழிபட்டபின், சிதம்பர இரகசிய தரிசனத்துக்கு வந்தபோது பிள்ளைப் பெருமான் (கைக்குழந்தை) அன்னையாரின் திருக்கையிலிருந்தார். தீட்சிதர் திரையை விலக்கச் சிதம்பர இரகசியம் தரிசனமாயிற்று. கைக் குழந்தையாகிய அடிகட்கும் தரிசனமாயிற்று. இறைவன் இரகசியத்தை குழந்தையாக இருந்த அடிகட்குக் காட்டி யருளினான். இதனை அடிகளே, தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத் தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம். வெளியாகக் காட்டியளன் மெல்உறவாம் பொருளே’ என்று தம்திருவாக்காகக் குறிப்பிட்டருளியுள்ளார். இங்ங்ணம் அடிகள் ஒராண்டுப் பருவத்தில் பூர்வஞான சிதம்பரமாகிய தில்லையில் ஒரு திரை தூக்கத் தாம் வெளியாகக் கண்ட அநுபவப் பொருளையே தமது நாற்பத் தொன்பதாவது அகவையில் உத்தரஞான சிதம்பரமாகிய வடலூரில் சத்தியஞான சபையில், எழுதிரை நீக்கி ஒளியாகக் காட்டியருளினார். அடிகளின் எட்டாம் திங்களில் தந்தை இறந்தார். சின்னம்மையார் பிள்ளைகளுடன் தாம் பிறந்த பொன் னேரிக்குச் சென்றார். சிலகாலம் அங்குத் தங்கிப் பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். மூத்த பிள்ளையாகிய சபாபதி பிள்ளை காஞ்சி மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் பயின்று புராணச் சொற்பொழி வாற்றுவ தில் புகழ் பெற்றார். அந்த வருவாயினால் குடும்பம் நடைபெற்றது. - - 2. ஆறா. திரு. அருள்விளக்க மாலை-44.