பக்கம்:சைவமும் தமிழும்.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 சைவமும் தமிழும் இளமையில்: முருகப் பெருமானை வழிபடு கடவுளாக வும், ஞானசம்பந்தரை வழபடுகுருவாகவும் திருவாசகத்தை வழிபடுநூலாகவும் கொண்டார்கள் அடிகள். கல்வி: தமையனார் சபாபதிப்பிள்ளை கல்வியைத் தொடங்கி வைத்தார். தம் ஆசிரியர் காஞ்சி சபாபதி முதலியாரிடம் கல்விகற்க அனுப்பிவைத்தார். இராமலிங்க ரின் அறிவுத்திறத்தையும் பக்குவநிலையையும் கந்தகோட் டஞ்சென்று கவிபாடித் துதித்தலையும் கண்ட முதலியார் தாம் கற்பிப்பதைக் கைவிட்டார். ஒதாது உணர்தல்: அடிகள் எப்பள்ளியிலும் பயின்ற தில்லை. எவ்வாசிரியரிடமும் கற்றாரிலர். கற்கவேண்டிய வற்றை இறைவனிடம் கற்றார். கேட்கவேண்டியவற்றை இறைவனிடமே கேட்டார். இவற்றை அவர்தம் வாக்குகளே அகச்சான்றுகளாக அமைகின்றன. கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே கண்டதுநின்னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே? ான்றும், . ஒதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே" என்றும், - ஒதுமறை முதற்கலைகள் ஒதாமல் உணர X உணர்விலிருந்துணர்த்தி அருள் உண்மைநிலை காட்டி’ என்றும் வருதலாலும் பிறவற்றாலும் தெளியலாம். 3. ஐந் திரு.அன்பு மாலை 16. 4. நான். திரு.தனித்திருவிருத்தம்-47