பக்கம்:சைவமும் தமிழும்.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 479 இளமையில் பாடுதல்: வீதியில் விளையாடித் திரியும் சிறுபிள்ளைப் பருவத்திலேயே அடிகள் அருட்பாடல் களைப் பாடும் திறம் பெற்றிருந்தார்கள். - உருவத்தி லேசிறியேனாகி யூகத்தி லொன்று மின்றித் தெருவத்தி லேசிறு கல்விசி யாடிடச் சென்றஅந்தப் பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்" என்பதனாலும், பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய பருவத்தே அணிந்தணிந்து பாடும்வகை புரிந்து' என்பதனாலும் பிறவற்றாலும் இதனை அறியலாம். அடிகளின் வரலாறு. இதனைச் சன்மார்க்கதேசிகன் எனும் ஊரன் அடிகள் () சென்னை வாழ்க்கை (2) வடலூர் வாழ்க்கை என்ற இருபெரும் பிரிவுகளாகப்பிரித்துப் பேசுவர். - சென்னை வாழ்க்கை கந்தகே ட்டப் பகுதியில் (1823–1835) அடங்கும். இப்போது அடிகளின் அகவை (1-12). திருவொற்றியூர்ப் பகுதியில் வாழ்வு (1835-1858) அடங்கும். அப்போது அடிகளின் அகவை (12-35). இக்காலத்தில். திருமுறைகள் 1, 2, 3, 5 பாடப்பெற்றன." 5. ஐந் திரு. அன்புமாலை-25 6. மூன். திரு-திருவருள்முறையீடு-48. 7. ஐந்திரு. அன்பு மாலை-14. х 8. திருத்தணிகைப் பகுதிக்குத் தனி இடம் இல்லை. அது கந்த கோட்டப்பகுதி திருஒற்றியூர்ப் பகுதிகளுள் அடங்கும். 警