பக்கம்:சைவமும் தமிழும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 சைவ சமய விளக்கு டிருத்தல் ஈண்டு நினைக்கத் தக்கது." இதுபோல் "திருவியலூர் உய்யவந்த சந்தானம்' என்பதாக ஒரு சந்தானம் இருந்ததை மேற்கூறப்பெற்ற இரண்டு நூல் களால் அறிய முடிகின்றது. சிவஞான போதத்தினை (3) அருவிச் செய்தவர் திருப் பெண்ணாகடத்தில் தோன்றித் திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருந்த மெய்கண்ட தேவநாயனார் என்பவரா வார். "மெய்கண்டார்’ என்பது திட்சையால் பெற்ற பெயர். இவரது பிள்ளைத் திருநாமம் சுவேதவனப் பெருமாள்' என்டது. இவ்ரது சந்தானமே திருக்கயிலாய பரம்பரை' என்று வழங்கப்பெறுகின்றது. இஃது இரு கிளையாய் திருவாவடு துறையில் ஒன்றும், தருமபுரத்தில் ஒன்றுமாக இரண்டு ஞான பீடங்களைக் கொண்டிலங்குகின்றது. சிவஞான சித்தியார் (4) இருபா இருபஃது (5) என்ற இரு நூல்களையும் அருளிச் செய்தவர் மெய்கண்டாரின் மாணாக்கர் அருணந்தி தேவ நாயனார் என்பவர். மெய் கண்டாரின் 49 மாணாக்கர்களுள் இவரே முதல்வராகத் திகழ்ந்தவர். அருள் நந்தி’ என்பது தீட்சாத் திருநாமம். இதற்குமுன் இவர் சகலாகம பண்டிதர் எனப் பெயர் பெற்றிருந்தார். மெய்கண்டதேவரைச் சிவபெருமானுட லும், இவரை நந்தி தேவருடனும் ஒப்பிட்டுப் போற்றுவர் சைவப் பெருமக்கள். உண்மை விளக்கத்தை (6) அருளிச் செய்தவர் மனவாசகங் கடந்தார் என்பவர். இவரும் மெய்கண்டாரின் மாணாக்கருள் ஒருவரே. இந்நூலைத் தவிர இவரைப் பற்றிய வேறு குறிப்பு ஒன்றும் அறியக்கூட வில்லை. சிவப் பிரகாசம் முதலிய எட்டு நூல்களையும்' அருளிச் செய்தவர் 35. தாயுமான அடிகள்-மெளன குரு வணக்கம் காண்க. 16. இவை சித்தாந்த அட்டகம்' என்ற பெயராலும் வழங்கப் பேறும். இவற்றுள் உண்மைநெறி விளக்கம் எபைதைச் கோழித் தத்துவராயர் என்பார் செய்ததாகச் சொல்வதும் உண்டு.