பக்கம்:சைவமும் தமிழும்.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 சைவமும் தமிழும் வடலூர் வாழ்க்கை () பூர்வஞான சிதம்பரப்பகுதியில் (1858-1864) அடங்கும். அப்போது அடிகளின் வயது (35-44, (2) உத்தரஞானசிதம்பரம் பகுதியில் (1867-1870) அடங்கும். அப்போது அடிகளின் அகவை (44-47) (37 சித்திவளாகப் பகுதியில் (1870-1874) அடங்கும். அப்போது அடிகளின் அகவை.(47-5) - (1) சென்னை வாழ்க்கை (1823-1858) (அ) கந்த கோட்ட வழிபாடு: பிள்ளைப் பருவத்தில் ஊர் சுற்றித் திரிந்த அடிகள் நாடோறும் கந்தகோட்டத்திற் குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 'தெய்வமணிமாலை'யும் கந்தர்சரணப்பத்தும் முதன் முதலில் அடிகளால் பாடப்பெற்றன. அடிகளால் இவை பாடப்பெற்ற பின்னரே அது பொன் னும் மணியும் நவமணியும் கொழிக்கும் தெய்வத்திருக் கோட்டமாகத் திகழ்கின்றது. கந்தசாமி க்ோயில் என்று வழங்கப்பெற்ற தலம் கந்தக்கோட்டம் என வழங்கத் தொடங்கியவர் அடிகளே. (ஆ) கண்ணாடியில் முருகன் காட்சி: அண்ணியார் கண்ணிர் வடிக்கக் கண்ட அடிகள் வீடுதங்கிப் படிப்பதாக உறுதிகூற அவர்விருப்பப்படி மேல்மாடியில் ஒதுக்கப் பெற்ற அறையொன்றில் கைநிறைய நூல்களோடும் பூசைப் பொருள்களோடும் புகுந்தார். உண்ணும்காலம் தவிர அறைக்கதவை மூடிக்கொண்டு முருக உபாசனையில் மூழ்கினார். உறக்கமும் அங்குத்தான். ஒருநாள் சுவரிலிருந்த கண்ணாடியில் தணிகைமுருகன் தோன்றிக் காட்சியளித் தான். - சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஒர்