பக்கம்:சைவமும் தமிழும்.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 484 கூர்கொண்ட வேலும் மயிலும்.நற் கோழிக் கொடியும்அருட் கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே!" என்ற பாடல்தான் அக்காட்சியைக் குறிப்பதாகும். (இ) இறைவனால் ஆட்கொள்ளப் பெறுதல்: ஒன்ப தாம் அகவையில் இது நிகழ்ந்தது. என்னை- - ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட அருட்கடலே என்உள்ள்த் தமர்ந்ததேவே" என்பதும், ஆறோடு மூன்றுஆண்டா வதிலே முன்னென்னை ஆண்டாய் கருணை அளித்தருளே' என்பதும் இதற்கு அகச்சான்றுகளாக அமைகின்றன. மேலும் பல பாடல்கள் அடிகளை இறைவன் சிறுபரு வத்தே ஆட்கொண்டருளினான்என்பதற்குச் சான்றுகளாக நிற்கின்றன. - (ஈ) ஞானவாழ்க்கை: பன்னிரண்டாம் அகவையில் அடிகளின் ஞானவாழ்க்கை தொடங்குகிறது. பன்னிரண்டாண்டு தொடங்கிநான் இன்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்" என்பதும், 9. முத். திரு. திருத்தணிகைப் பதிகங்கள். பிரார்த்தனை மாலை-1. - - 10. நான். திரு. அடிமைப் பதிகம்-3 11. ஆறா. திரு. வாதனை கழிவு 7 12. ஆறா.திரு. பிள்ளைப்பெருவிண்ணப்பம்-125. சை.த-31