பக்கம்:சைவமும் தமிழும்.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 சைவமும் தமிழும் பன்னிரண் டாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே? என்பதும் இதற்குச்சான்றுகளாக அமைகின்றன. (உ) ஒற்றியூர் வழிபாடு: நாள்தோறும் ஒற்றியூர் சென்று தியாகப்பெருமானையும் வடிவுடை அம்மையையும் வழிபட்டு வந்தவர். இருபத்துமூன்றாண்டுக் காலம் இவ்வழி பாடு தொடர்ந்து நடைபெற்றது. இக்காலத்தில் வடிவுடை மாணிக்கமாலை' 'இங்கிதமாலை' இரண்டாம் திரு முறையில் பெரும்பகுதியும் தோன்றியவை. திருத்தணிகை, திருமுல்லைவாயில் பற்றிய பாடல்களும் இக்காலத்தில் எழுந்தவை. - (ஊ) திருமணம்: மூவாசைகளையும் பிள்ளைப்பருவத் திலேயே முற்றத் துறந்த அடிகள் இல்வாழ்வை விரும்ப வில்லை. பாலுண் பருவத்திலேயே இல்வாழ்வில் தமக்கு அருவருப்பு உண்டெனஅடிகள் கூறுவர். இதில் அருவருப் பால் உணும் காலையே உளதால்”14 என்பது காண்க. உற்றார் வற்புறுத்தலும் ஊழ்வலியும் திருமணத்திற்கு அடிகளை இசையச்செய்தன. தமக்கை உண்ணாமுலை அம்மையாரின் மகள் தனம்மாள் மனைவியானார். தொட்டுத்தாலி கட்டினார்களேயன்றி இல்வாழ்வில் ஈடுபட்டார்களல்லர். முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெளிந்திலேன் மோகமே லின்றித் தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக் கைதொடச் சாந்தே 13. துெ டுெள் வியப்பு-78. 14. ஆறா. திரு. பிள்ளைச் சிறுவிண்ணப்பம்-1