பக்கம்:சைவமும் தமிழும்.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 483 குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன்' என்பது அடிகளின் திருவாக்கு. (எ) வித்துவானாக விளங்குதல்: கந்தகோட்டத்தையும் திருத்தணிகையையும் திருவொற்றியூரையும் பாடிப்பரவி அருட்கவிஞராக விளங்கி அடிகள் சென்னையில் சிறந்த வித்துவானாகவும் திகழ்ந்தார்கள். (ஏ) பாடஞ்சொல்லல்: தொழுவூர் வேலாயுத முதலி யார், இறுக்கம் இரத்தினமுதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, காயாறு ஞானசுந்தர அய்யர், பண்டார ஆறுமுக ஐயா ஆகியோர் அடிகளிடம் பாடம் கேட்கும் பேறு பெற்றனர். இவர்களுள்தொழுவூர் வேலாயுத முதலியார் அடிகள் சித்திபெற்றபின்(1874) சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இறுக்கம் இரத்தினமுதலியார் பள்ளியாசிரியரானார். வீராசாமி முதலியார் சில இலக்கண நூல்களைப் பதிப்பித்தார். சுந்தரம்பிள்ளை புராணச் சொற்பொழிவாற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். பாடஞ்சொல்லிப் போதகாசிரிய ராக விளங்கிய அடிகள் சிறுவர்களைச் சேர்த்தும் நீதிநூல்களைப் பயிற்றுவித்தார்கள். இதனை, தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலில்ே வந்தகோ பத்தில் சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்தான் கலங்கிய கலக்கம் வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களின் கோபம் மிகப்புகுந் தடித்துப் பட்டயா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ" 15. மேலது. பி. பெருவிண்ணப்பம்-43. 16. ஆறா. திரு. ப.பெ. வி. 36.