பக்கம்:சைவமும் தமிழும்.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 - சைவமும் தமிழும் என்ற அடிகளின் திருப்பாடலால் அறியலாம். (ஐ பதிப்பாசிரியராதல்: அடிகள் ஒழிவிலொடுககம், தொண்டமண்டல சதகம், சின்மயதீபிகை ஆகிய மூன்று நூல்களையும் பதிப்பித்தருளினார்கள். (ஒ) நூல்கள் இயற்றல் உரைநடைநூல் அருகித் தோன் றிய அக்காலத்தில் மனுமுறை கண்டவாசகம், 'சீவ காருண்ய ஒழுக்கம் ஆகிய இரண்டையும் அருளினார் கள். முன்னது அவர் காலத்திலேயே (1814 வெளியாயிற்று. பின்னது அடிகள் சித்திபெற்றபின் அச்சேறிற்று. ஒ) சாற்றுக் கவிகள் அருளல்: பலர் இதைப் பெரும் பேறு போல் பெற்றனர். முத்து கிருட்டிண பிரமம் எழுதிய நிட்டாதுபூதி உரைக்கும், மதுரை ஆதீனம் சிதம்பரசுவாமி கள் பதிப்பித்த சிதம்பர புராணப் பதிப்பிற்கும், மாயூரம் வேதநாயகப் பிள்ளையின் நீதிநூலுக்கும் அடிகள் சாற்று கவிகள் அருளியுள்ளார்கள். (2) கருங்குழி வாழ்க்கை: (1858-1867): ஆரவாரம் நிறைந்த சென்னையில் வாழ்வதையும் குடும்பத்தினரோடு வீட்டில் இருப்பதையும் அடிகள் விரும்பவில்லை. கேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்னுளம் பயந்தே நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன்'7 என்பதனால் இதனை அறியலாம். 1857-இல் ஒருநாள் சென்னை வாழ்வைத் துறந்தார்கள். தில்லையில் அடிகளைக் காண நேர்ந்த கருங்குழி மணியக்காரர் வேங்கடரெட்டியார் தம்மூருக்கு வருமாறு, அடிகளை 17. ஆறா. திரு. பி.பெ.வி-58.