பக்கம்:சைவமும் தமிழும்.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 485 வேண்ட, அடிகளும் கருங்குழியில் அவர் இல்லத்திலேயே தங்கினார்கள்.(1858-1867). 1867-இல் தருமசாலையை வடலூரில் ஏற்படுத்தும்வரை கருங்குழி அடிகளின் உறைவிடமாயிற்று. வள்ளலார் வாழ்வில் ரெட்டியார் களின் தொண்டு கணிசமானது." கருங்குழியில் வாழ்ந்த போது அடிகள் அடிக்கடி சிதம்பரம் சென்று வழிபடு வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். கருங்குழியில் வழிபட்ட காலத்தைச் சிதம்பரவழிபாட்டுக் காலம்’ எனலாம். நான்காம் திருமுறை (வரலாற்று முறையில்) ஐந்தாம் திருமுறையும் ஆறாம் திருமுறையின் முற்பகுதிப் பதிகங்களும் இக்காலத்தில் பாடப்பெற்றவை. () நீரால் விளக்கெரிந்தது: கருங்குழிவிட்டின் அறையில் ஒருநாள் இரவு அடிகள் எழுதிக் கொண்டிருந்த போது விளக்கு மங்கியது. எண்ணெய் செம்பென மயங்கி அடிகள் தண்ணிர் செம்பை எடுத்து விளக்கில் வார்க்க, அஃது இரவு முழுவதும் நன்கு எரிந்தது. இவ்வரலாற்றை அடிகளே ஒரு பாடலில். குறிப்பிட்டுள்ளார்கள். மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும் பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேர்ஒர் புதுமை அன்றே செய்விளக்கும் புகழுடைய சென்னிநகர் நண்பர்களே செப்பக்கேளிர் நெய்விளக்கே போன்றொருதண் ணிர் விளக்கும் எரிந்தசந் நிதியின் முன்னே" என்ற திருப்பாடலில் இதனைக் கண்டுமகிழலாம். 13. வள்ளலார் பணியில் ரெட்டியார்கள் (அருள்வடிவேலன் பதிப்பகம், முருகேச நகர், வண்டிபாளையம் அஞ்சல் கடலூர்-607 004) காண்க. 19. நான். திரு. அருள் நிலை விளக்கம்-1.