பக்கம்:சைவமும் தமிழும்.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 சைவமும் தமிழும் (ii) சத்திய சமரச சன்மார்க்க சங்கம் (1865) அடிகள் இப்பெயரில் ஒரு நெறியை ஏற்படுத்தினார்கள். இதன்படி, கடவுள் ஒருவரே; அவரை உண்மை அன்பால் ஒளி வடிவில் ஜோதி) வழிபடவேண்டும். சிறுதெய்வ வழிபாடு கூடாது; அத்தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது. புலால் உண்ணலாகாது. சாதி சமய முதலிய எவ்வகை வேறுபாடும் கூடாது. எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக் கொள்ள வேண்டும். ஏழைகளின் பசிதீர்த்தலாகிய சீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல். புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கமாட்டா. இறந்தவரைப் புதைக்க வேண்டும்; எரிக்கக்கூடாது. கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டா.இவையே அடிகளின் சன்மார்க்கக் கொள்கை கள். இவற்றைப் பின்பற்றவும் பரப்பவும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் 1865 இல் அடிகளால் நிறுவப்பெற்றது. (ii) சத்திய தருமசாலை: அடிகளின் கொள்கைகளில் தலையாயது சீவகாருண்யம். சீவகாருண்யத்தை அடிகள் இருவகையாக வற்புறுத்துவர்: (அ) புலால் மறுத்தல் (ஆ) அற்றார் அழிபசிதீர்த்தல். இரண்டாவதாகக் குறிப் பிடப்பெற்ற பேரறத்தை நடத்துவதற்காக 23-5-1867 இல் வடலூரில் சத்தியதருமாசாலையை அடிகள் நிறுவினார் கள். சாலையை நிறுவியபின் அதனையே உறைவிடமாகக் கொண்டார்கள் 1870-ஆம் ஆண்டு வரை சாலையிலேயே உறைந்தார்கள். - 3. சித்திவளாக வாழ்க்கை (1870-1874) () நாளடைவில் தரும சாலையில் கூட்டம் பெருகியது. அடிகள் தனித்துறையக் கருதினார்கள். வடலூருக்குத் தெற்கே இரண்டுகல் தொலைவில் மேட்டுப்பாக்கத்திற்குச்