பக்கம்:சைவமும் தமிழும்.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 487 சென்று அங்கே உறையத் தொடங்கினார்கள். அடிகள் உறைந்த இடம்-திருமாளிகை-சித்திவளாகம் என்பது. இஃது அடிகளே இட்ட பெயர். சித்தியை (வீடுபேற்றைத்) தரும் இடம் என்பது இதன் பொருள். 1870 முதல் 1874இல் சித்தி பெறும்வரை இங்கேயே உறைந்தார்கள். இத்திரு மாளிகையிலேயே சித்தியும் பெற்றார்கள். (ii) சத்திய ஞானசபை: கடவுளை ஒளி (அருட் பெருஞ்சோதி) வடிவிற்கண்ட அடிகள் ஒளிவழிபாட்டிற் கென வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார்கள். 1871 (பிரசோற்பத்தி) ஆண்டில் சபை கட்டத் தொடக்கம் செய்யப்பெற்றது. அது 25-1-1872 பிரசோத்பத்தி தைத்திங்கள் 13 நாள்வெள்ளி பூசநாளில் நிறைவு பெற்று அன்று முதல் சபையில் வழிபாடு தொடங்கி நடைபெற்றது. அனைவரும், 'அருட்பெருஞ்சோதி தரிசனத்தைக்கண்டு களித்தனர். சத்திய ஞானசபையை இயற்கை விளக்கம்' என்பர் அடிகள். அகத்தில் காண்டற்குரிய அநுபவத்தைப் புறத்தில் பாவனையாகக் காட்டுவதே சத்தியஞானசபை, அருட் பெருஞ்சோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வெவ்வேறு நிறமுள்ள ஏழு திரைகளும் தத்துவப் படலங்களே.' நம் மிடமுள்ள அஞ்ஞானமாகிய திரைகள் நீங்கப்பெற்றால் ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்சோதியைத் தரிசிக்கலாம் என்பது கருத்து. அகத்தே நாம் பெற்ற அருட்பெருஞ்சோதி அநுபவத்தையே புறத்தே சபையாகக் காட்டினர். திருந்தும் என் உள்ளத் திருக்கோயில் ஞான சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்' 20. வெள்ளை ஒளியில் VSEYSR என்ற ஏழு நிறங்கள் அடங்கி யிருப்பதாக மெய்ப்பித்துள்ளனர் அறிவியலறிஞர்கள். V-Violet; [-Indigo, G-Green; B-Blue, Y-Yellow; O-Orange; R-Red. இந்த ஏழுநிறப் படலங்களே மறைந்து நின்று அருட்பெருஞ் சோதியைக் காட்டுகின்றனவோ? 21. ஆறா. திரு. உண்மை கூறல்-7