பக்கம்:சைவமும் தமிழும்.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 சைவமும் தமிழும் சத்திய ஞான சபைன்ன்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டேன்22 என்பன பெருமானின் அருள்வாக்குகள். (iii) சன்மார்க்கக்கொடி முன்னைய ஞானிகள் எவரும் தம் கொள்கைக்குகந்த தனிக் கொடி கண்டதில்லை: அடிகள் ஒருவரே கொடி கண்டவர்கள். கொடிகட்டிக் கொண்ட்ோம் என்று சின்னம்பிடி' என்று பாடியவர். கள். இவர்கண்ட கொடிக்கு 'சன்மார்க்கக்கொடி’ என்றுபெயர் மஞ்சள், வெள்ளை ஆகிய இருநிறங்கொண்ட சன்மார்க்கக் கொடியை மேட்டுக் குப்பம் சித்திவளாகக் திருமாளிகையில் 22.10.1873 (சீமுக ஆண்டு ஐப்பசித் திங்கள் 7ஆம் நாள் புதன்கிழமை காலை 8 மணிக்கு முதன்முதலா கக் கண்டு நீண்டதோர் உபதேசத்தையும் செய்தருளினார் கள். இந்த உபதேசம் மகா உபதேசம், பேருபதேசம் என்ற திருநாமங்களால் வழங்குகின்றது. (iv) சித்தி அடைந்தது: சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே. சாகாதிருப்பவனே சன்மார்க்கி என்பது அடிகளின் உபதேசம். "என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே’ துஞ்சாதநிலை ஒன்று சுத்த சன்மார்க்கச் சூழலில் உண்டது சொல்லளவன்றே" என்பவை அடிகளின் திருவாய்மொழிகள், அடிகள் சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என்னும் மூவகை தேகசித்தியையும் பெற்றவர்கள், தேகசித்தி பெற்றார் உடம்புகள், நிலத்தில் விழா. அவை வெளியாய் அருளில் 22. மேலது. அருள் அற்புதம்-4. 23. வைணவதரிசனத்திற்கு கருடக்கொடி உண்டு, சைவத்திற்கு நந்திக்கொடி (?) உண்டு. 24. ஆறா. திரு. சின்னம்பிடி4. 25. ஆறா. திரு.மரணமிலாப் பெருவாழ்வு. 26. மேலது 21-26