பக்கம்:சைவமும் தமிழும்.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 489 கலக்கும். அவர்கள் இறைவனோடு இரண்டறக் கலப்பர். அவர்களுக்கு இனிப்பிறப்பு இல்லை; பிறந்த பிறப்பாகிய இப்பிறப்பே இறுதிப் பிறப்பு. இப்பிறப்பில் பெற்ற இத்தேகமே இறுதித்தேகம். இனி ஒரு தேகம் எடுப்பதில்லை. இதுவே நித்தியதேகம். நித்தியதேகம் பெற்ற அடிகள் ஒரு தைப்பூசநாளில் சீமுக ஆண்டு தைத்திங்கள் 19ஆம் நாள் (30-1-1874) வெள்ளிக்கிழமை இரவு 15 நாழிகைக்கு (12 மணிக்கு) தமது திருவறைக்குள் நுழைந்து கதவைத் திருக்காப்பிட்டுக்கொண்டு இரண்டரை நாழிகை யில் இறைவனோடு இரண்டறக்கலந்தருளினார்கள். என்சாமி என்துரை என்உயிர் நாயகனார் இன்றுவந்து நான் இருக்கும் இடத்தில்அமர் கின்றார் பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே ஏது பேர்உடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் தன்சாதி உடையபெருந் த்வத்தாலே நான்தான் சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே வெளியாகும் இரண்டரைநாழிகைகடந்த போதே’ 2. அருளிச் செயல்கள்: திருஅருட்பாவில் திருமுறை என்பது அதன் பகுதிக்குப் பெயராயிற்று. திருமுறைகளும் அவற்றின் பதிகளும் அவை பாடப்பெற்ற காலவரிசையில்வரலாற்று முறையில்- வகுக்கவும் அடைவு செய்யப் பெற வும் இல்லை. பொருளமைதி கருதியும் வகுத்திருப்பதாகக் கூறுவதற்கில்லை. திருமுறைகளின் தொகை ஆறு என உள்ளத்தில் அமைத்துக்கொண்டு திருமுறைகள் வகுக்கப் பெற்றன.' 27. ஆறா. திரு. சத்திய அறிவிப்பு 4. - 28. திருவைந்தெழுத்தோடு ஓங்காரத்தைச் சேர்க்க ஒம் சிவாயநம என ஓங்கார பஞ்சாக்கரத்தின் எழுத்து ஆறாகும். சமயங்கள் ஆறு. அத்துவா ஆறு இவற்றை உட்கொண்டு திருமுறைகள் ஆறென வகுத்தார் வேலாயுதனார். (அடிகளின் மாணாக்கர்)