பக்கம்:சைவமும் தமிழும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் 13 கொற்றவன்குடி உமாபதி தேவநாயனார். இவர் அருள் நந்தி தேவரின் ம்ாணாக்கராகிய மறைஞான சம்பந்தரின்' மாணாக்கராவர். இவர் தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவர். இவர் அதிதீவிர, பக்குவத்தால் மறைஞான சம்பந்தரை அடைந்து உபதேசம் பெற்று அவர் வழி நின்றமையால் ஏனைத் தில்லைவாழ் அந்தணர்கள் விலக்கி விட்டனர். இதனால் இவர் தில்லைக்கு அருகிலுள்ள கொற்றவன் குடியில்' மடம் அமைத்துக்கொண்டு தங்கி யிருந்த காலத்தில் தில்லைவாழ் அந்தணர்களும் பிறரும் வியக்கும் வண்ணம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். மெய்கண்ட சந்தானத்தில் உள்ள மெய்கண்டார்,அருள் நந்தி தேவர், மறைஞான சம்பந்தர், உமாபதி தேவர் ஆகிய நால்வரும் சந்தான குரவர் எனப் போற்றப்பெறுவர். இவர்களுடைய வரலாறுகள் விரிவானவை. இவற்றைச் 'சந்தனாச்சாரியர் புராண சங்கிரகம்’ என்ற நூலில் காணலாம். ஆண்டுக் சுண்டுகொள்வாயாக. மேற் குறிப்பிட்ட பதினான்கு நூல்களும் மெய் கண்ட நூல்கள் எனவும் வழங்கப்பெறுகின்றன. இவையேயன்றி சீகாழிச் சிற்றம்பல நாடிகள் செய்த துகளறு போதமும்’ திருவொற்றியூர் முனிவர் செய்த ஞானாமிதர்மும் குறிப்பிடத்தக்க சித்தாந்த நூல்களாகும் என்பதையும் அறிவாயாக. இவற்றைத் தவிர, சித்தாந்த சாராவளி, அட்டப் பிரகரணம், பவுட்கர விருத்தி முதலிய வட நூல்களும் சித்தாந்தத்தை விளக்குபவையாகும். இன்னொரு கருத்தையும் நீ அறிந்து கொள்வது இன்றி யமையாதது. மெய்கண்டாரது கொள்கை அல்லது 17. வைதிக அந்தன மரபினர். யாதொரு நூலும் செய்திலர்: 18. அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ளது. கொற்றவன் குடிக் குடியிருப்பு என்ற பெயருடன் வழங்கும் இதில் இப்போது பல்கலைக்கழக ஆசிரியர்கள் வாழ்கின்றனர்.