பக்கம்:சைவமும் தமிழும்.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 491 மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்;உனை மறவா திருக்கவேண்டும்; மதிவேண்டும்; நின்கருணை நிதிவேண்டும்; நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்.ஒங்கு கந்தவேளே! தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே (8) பிள்ளைப் பெருமான் சிறுவயதில் எவ்வெற்றை இறைவனி டம் வேண்டினார் என்பது இதனால் போதரும்." (2) கந்தர் சரவணப்பத்து: இதில் பாடல்கள் பத்து அடங்கியுள்ளன. - கோலக் குறமான் கனவா சரணம் குலமா மணியே சரணம் சரணம் சீலத் தவருக் கருள்வோய் சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் ஞாலத் துயர்தீர் நலனே சரணம் நடுவாக்கியநல் ஒளியே சரணம் காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் (5) என்பது ஐந்தாவது பாடல். திருத்தணிகைப் பதிகங்கள்: இவற்றில் 3 பிரார்த்தனை மாலை முதல் 52. தனித்திருத்தொகை இறுதியாக ஐம்பது பதிகங்கள் அடங்கும். இவற்றுடன் இத்திருமுறையும் நிறைவு பெறுகின்றது. 29. கந்தகோட்டத்தைப் பற்றிப்பல பிரபந்தங்கள் தோன்றியிருப்ப தும் வள்ளல்பெருமானின் அருட்பாக்களைத் தவிர, மற்றவை யாவும் பெருவழக்காகப் பயிலப் பெறவில்லை என்பதும் கண்கூடு.