பக்கம்:சைவமும் தமிழும்.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 சைவமும் தமிழும் (3) பிரார்த்தனைமாலை: இது முப்பது பாடல்கள் அடங்கியவை. சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந் - தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஒர் கூர்கொண்ட வேலும் மயிலும்.நற் கோழிக் கொடியும்அருட் கார்கொண்ட வண்ணத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே (1) (கண்ணுற்றதே-இஃது ஒருமைபன்மை மயக்கம்) தேக்குப் பதிலாக வே அமைந்தால் இஃது எற்படாது. கண்ணாடிமுன் அடிகள் முருகனை வழிபட்ட போது அப்பெருமான் அவருக்குக் காட்சியளித்த நிலையில் பாடிய பாடல். முன்னையோர் எவரும் கண்ணாடியில் வழிபட்டதாக வரலாறு இல்லை. இஃது அடிகள் வரலாற்றில் ஒரு புதுமையான நிகழ்ச்சி. (7) சீவசாட்சிமாலை: இஃது இருபத்தெட்டு பாடல்களைக் கொண்டது. உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன் உளவறிந்தோ ஐயா நீ உன்னைப் போற்றார் கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய் தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத் தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே தள்ளரிய புகழ்தணிகை மணியே சீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே (21) இதில் ஒவ்வொரு பாடலில் இறுதியடி சிவசாட்சியாய் நிறைந்தருளும் சகசவாழ்வே' என்று இறுவதைக் கண்டு மகிழலாம்