பக்கம்:சைவமும் தமிழும்.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 493 (9) இரந்த விண்ணப்பம்: இது தணிகைப் பெருமானை இரக்கும் பாங்கில் பத்துப் பாடல்களைக்கொண்டது. தேனும் தெள்ளிய அமுதமும் கைக்குநின் திருவருள் தேன்.உண்டே யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே (7) என்பது ஏழாவது பாடல். முருகப் பெருமானுடன் நேரில் பேசுவது போல் அமைந்துள்ளது. (14) ஆறெழுத்துண்மை: இதில் அடங்கியவை பத்துப் பாடல்கள். துன்னும் மறையின் முடிவில்ஒளிர தூய விளக்கே சுகப்பெருக்கே அன்னை அணையாய் தணிகைமலை அண்ணா உன்றன் ஆறெழுத்தை உன்னி மனத்தில் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணிறிட்டால் சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே. என்பது ஐந்தாம் பாடல். ஆறெழுத்து முருகாய நம’ என்பது. - (18) புன்மை நினைந்திரங்கல்: இதில் உள்ளவை பத்துப் பாடல்கள். - கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி