பக்கம்:சைவமும் தமிழும்.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 சைவமும் தமிழும் மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார் - மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ பண்ணைக் காட்டி உருகும்.அ டியார்தம் பத்திக் காட்டிமுத் திப்பொருள் ஈதென விண்ணைக் காட்டும் திருத்தணி காசல் வேல னேஉமை யாள்.அருள் பாலனே (8) என்பது எட்டாவது பாடல். அடிகள் மங்கையரைச் சாடுவது வருந்தத்தக்கது. அழகுடன் மங்கையர் படைப்பு இறைவனுடையது. வமிச விருத்திக்காக ஆணைக்கவரும் நோக்குடையது; வேறு தீய கருத்தால் அன்று. விட்டில் பூச்சிபோல் அதில் மயங்கி விழாமல் இருப்பது ஆணின் பொறுப்பு. கெடுப்பது ஆணே அன்றி பெண் அன்று. ஆண் தன்னை நொந்துகொள்ள வேண்டுமேயன்றி வனிதை யரைத் துாற்றுவது முறையன்று. (19) திருவடிசூட விழைதல்: இதில் அட்ங்கிய பாடல்கள் பத்து. - : கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் விழாமே நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே (8) என்பது எட்டாவது பாடல் இங்ங்ணம் வேண்டுவது தான் முறை. - - * (26) முறையிட்ட பத்து: இது பத்துப் பாடல்கள் அடங்கிய பதிகம். . வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே