பக்கம்:சைவமும் தமிழும்.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 சைவமும் தமிழும் (37 கூடல் இழைத்தல்: இது பத்து அகத்துறைப் பாடல்கள் அடங்கியது." - கல்லால் அடியார் கல்லடி உண்டார் கண்டார் உலகம் களைவேதம் செல்லா நெறியார் செல்லுறும் முடியார் சிவனார் அருமைத் திருமகனார் எல்லாம் உடையார் தணிகா சலனார் என்னா யகனார் இயல்வேலார் நல்லார் இடைஎன் வெள்வளை கொடுபின் நண்ணார் மயில்மேல் நடந்தாரே (5) என்பது ஐந்தாம் பாடல். (38) தரிசனை வேட்கை: இதில் பத்துப் பாடல்கள் உள்ளன. மாரனை எரித்தோன் மகிழ்திரு மகனை வாகையம் புயத்தனை வடிவேல் தீரனை அழியாச் சீரனை ஞானச் செல்வனை வல்வினை நெஞ்ச்ச் சூரனைத் தடிந்த வீரனை அழியாச் சுகத்தினைத் தேன்துளி கடப்பந் தாரனைக் குகன்என் பேருடை யவனைத் தணிகையில் கண்டிறைஞ் சுவனே(6) என்பது ஆறாம் பாடல். (40) ஏத்தாப் பிறவி இழிவு: பத்துப் பாடல்கள் அடங்கிய பதிகம் இது. மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன் தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன் சிவபி ரான்பெற்ற செல்வமே நினது 30. முதல் திருமுறையில் நான்கு பதிகள் உள்ளன. (அகத்துறை)