பக்கம்:சைவமும் தமிழும்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 497 அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி அழுது கண்கள்.நீர் ஆர்த்திட நில்லேன் இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன் என்செய் வான்பிறந் தேன்எளி யேனே (4) என்பது நான்காம் பாடல். (48) போற்றித் திருவிருத்தம்: இதில் பதினைந்து பாடல்கள் அடக்கம். முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி சக்திவேற் கரத்த போற்றி சங்கரி புதல்வ போற்றி சித்திதந் தருளும்தேவர் சிகாமணி போற்றி போற்றி பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி (10) என்பது பத்தாம் பாடல். இரண்டாம் திருமுறை இதில் சில தலைப்புகளிலுள்ள சில பாடல்களைக் காட்டுவேன். (1) கருணை விண்ணப்பம்: இதில் அடங்கிய பாடல்கள் பத்து. இதில், அருள்ஒர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால் தெருள்ஒர் சிறிதும் இலையே.என் செய்கேன் எங்கள் சிவனேயோ மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிதன்றே(4) இது நான்காம் பாடல். சை.த-32