பக்கம்:சைவமும் தமிழும்.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 . சைவமும் தமிழும் (3) பெருவிண்ணப்பம்: பத்துப் பாடல்களில் விண்ணப்பம் நடைபெறுகின்றது. எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே கண்ணார் நுதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ் வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே (5) என்பது ஐந்தாம் பாடல். . - (7) அபராதத்தாற்றாமை; இது திருவொற்றியூர்பற்றிய பாடல்கள் பத்துக் கொண்டது. தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன் தோகையர் மயக்கிடை அழுந்தி ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள மாமணிக் குன்றமே மருந்தே ஓங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி யூர்வரும் என்னுடை உயிரே (2) என்பது இரண்டாம் பாடல். இவர்தம் பாடலில் அடிக்கடி மாதராரிடம் மயங்கி என்று வருவது வியப்பாக உள்ளது. இவர்தம் வாழ்க்கை வரலாற்றை நோக்கினால் 'மங்கையர் வாசனை இவரை ஒருநாளும் எட்டவில்லை என்பதுதான் உண்மை. (9) அருளியல் வினாவல்: திருமுல்லைவாயிலில் பாடிய இப்பதிகம் பத்துப் பாடல்களைக் கொண்டக.