பக்கம்:சைவமும் தமிழும்.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 499 முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா மன்னிய கருணை வாரியே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன் அருட்பெருங் கோயில்வந் தடைந்தால் என்இது சிவனே பகைவரைப் போல்பார்த் திருப்பதுன் திருவருட் கியல்போ (7) என்பது இப்பதிகத்தின் ஏழாம் பாடல். (23) நமச்சிவாய சங்கீர்த்தன. லகரி: இது திருவொற்றி யூர், திருத்தில்லை என்ற தலங்கள் பற்றியது. இத்திருமுறை யில் பெரும்பாலான பாடல்கள் ஒற்றியூர் பற்றியனவே. பெற்ற தாய்தனை மகமறந்த தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந்த தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே (7) என்பது ஏழாம் பாடல். இப்பதிகப் பாடல்கள் அனைத் துமே தேவாரத்தில் கள்ணும் நமச்சிவாயப் பதிகப் பாடல் கள் போல் உள்ளத்தை உருக்கும் பெற்றியனவாக உள்ளன. (29) நெஞ்சைத்தேற்றல்: பத்துப் பாடல்கள் அமைந்த இப்பதிகம் ஒற்றியூர்பற்றியது. கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே கருதிய வேண்டிய தியாதது கேண்மோ சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான் சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்