பக்கம்:சைவமும் தமிழும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霞本 சைவ சமய விளக்கு சித்தாந்தம் ஆகமாந்தம்’ எனப்படும் சைவசித்தாந்தமாக உள்ளது. இதனால் அவரை சைவ சித்தாந்தத்தின் முதலாசிரியர் எனக் கொள்ளும் மரபு ஒன்று உண்டு. ஆனால், உண்மையில் சைவ சித்தாந்தத்தின் முதலாசிரியர் சிவபெருமானே. அவர் திருக்கயிலையில் தென்முகக் கடவு ளாக (தட்சிணாமூர்த்தியாக) இருந்து நந்தி பெருமானுக்கு உண்மை ஞானத்தை அருளினார். நந்தி பெருமானின் மாணாக்கர் சனற் குமார முனிவர்; இவர் மாணாக்கர் சத்திய ஞான தரிசிகள்; இவர் மாணாக்கர் பரஞ்சோதி மாமுனிகள். இவர்கள் யாவரும் என்றும் திருக்கயிலையில் இருப்பவர்கள். ஆதலின் இவர்கள் அகச் சந்தானாச் சாரியர்கள்’ எனப்படுவர். இம்மரபு தட்சிணா மூர்த்தி வழி' என்று பேசப்படும். - இவர்களில் பரஞ்சோதி மாமுனிகள் ஒரு கால் வான் வழியாகச் செல்கையில் தமிழகத்தில் திருவெண்ணெய் நல்லூரில் சுவேத வனப் பெருமாள் என்னும் பிள்ளைத் திருந்ாமத்துடன் எழுந்தருளியிருந்த மெய் கண்ட தேவருக்குத் தம் வழிவழி உபதேசத்தைச் செய்து சென்றார். இவர் வழியாக இந்நிலவுலகில் சித்தாந்தம் பரவியது. மெய் கண்ட தேவர், அருணந்தி தேவர், மறை ஞான சம்பந்தர், உமாபதி சிவம் என்கின்ற இந்நால்வரும் நிலவுலகில் விளங்கினமையால் புறச் சந்தானாசாரியர்கள் என்று வழங்கப் பெறுகின்றனர்." இம்மரபு "பரஞ்சோதி 19. சித்தியார்-நூற்சிறப்பு-1.0 - 20. இத்தகைய குரு பரம்பரை வைணவ சமயத்திலும் உண்டு. பெரிய பெருமாள் (சீமந் நாராயணன்) முதல் குரு. சிஷ்யைகள்-பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார். நீள்ாதேவி என்ற நாச்சிமார்கள். ப்ெரிய பிராட்டியாரின் சீடர்கள்: அனந்தன், கருடன், விஷ்வக் சேநர். இவர்கள் யாவரும் வைகுந்தத்தில் இருப்பவர்கள். நம்மாழ்வார் திருப் புளியாழ்வாரின்கீழ் தியானத்திலிருக்கும்போது விஷ்வக் சேநர் இவருக்கு உபதேசித்தார். இவரிடமிருந்து நாத