பக்கம்:சைவமும் தமிழும்.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 501 (61) பழமொழிமேல் வைத்துப் பரிவு கூர்தல்: திருவொற்றியூர் பற்றிய இப்பதிகம் பத்துப் பாடல்களைக் கொண்டது." முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும் மூடன் என்னநின் மொய்கழல் பதமேத் துதல்இ லாதுநின் அருள்பெற நினைந்தேன் துட்ட னேன்.அருட் சுகம்பெறு வேனோ நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும் - திகழும் ஒற்றியூர்த் தியாகநாயகனே (7) என்பது ஏழாம் பாடல். முதல் அடியில் முதல் இலார்க்கு ஊதியம் இல்லை என்ற பழமொழி அமைந்திருத்தல் காணலாம். ஒவ்வொரு பாடலும் ஒரு பழமொழியின் அடியாகப் பிறப்பதை அறியலாம். (75) வடிவுடை மாணிக்கமாலை: இது காப்பு ஒன்றும் நூல் 100-உம் வாழ்த்து ஒன்றும் கொண்ட கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்தது. திருவொற்றியூர் வடிவாம்பிகை மீது எழுந்த ஒரு பிரபந்தம். சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத் தார்கொண்ட செந்தமிழ் பாமாலை சாத்தத் தமியனுக்கே ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே 31 திருமங்கையாழ்வாரின் 'பழமொழியால் பணிந்துரைத்த பாட்டு (பெரி. திரு 10.9) என்பது இத்துடன் ஒப்பிடல் தகும்.