பக்கம்:சைவமும் தமிழும்.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 சைவமும் தமிழும் - என்பது காப்புச் செய்யுள். நூலிலுள்ள ஒவ்வொரு பாடலும் வடிவுடை மாணிக்கமே என்று இறுகின்றது. என்பது மலையான் தவம்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச் சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே - அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே (8) ஒரு நயமான பாடல். பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும் நெருப்புறு கையும் கனல்மேனி என்பது யும்கண்டு நெஞ்சம் அஞ்சாய் மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே (22) மற்றொரு நயம்செறிந்த பாடல். இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னும்சற்றும் எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த மட்டார் குழல்மட மானே வடிவுடை மாணிக்கமே (46) என்பது பிறிதொரு நயமிக்க பாடல்.