பக்கம்:சைவமும் தமிழும்.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 503 வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப் பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னை இப் பேதைஎன்வாய் வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே (74) என்பது இன்னொரு நயஞ்செறிபாடல். பாடல்கள் யாவும் நயஞ்செறிந்தவையே. காட்டுகளாகச் சில சொல்லிக் காட்டினேன்; அவ்வளவே. . வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள் வாழிநின் நாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர் வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்தருநீ வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே (101) மாலை என்ற வாழ்த்துப்பாடலுடன் நூல் நிறைவு பெறுகின்றது. w - (79) இரங்கன்மாலை: திருவொற்றியூர் பெருமான் மீது தலைவி இரங்கலாக அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த 31 பாடல்களைக் கொண்டது. இதில் மூன்று பாடல்கள் காட்டப்பெறுகின்றன. தகைசேர் ஒற்றித் தலத்தமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க நகைசேர்ந் தவரை மாலையிட்ட நாளே முதல்இந் நாள்.அளவும்