பக்கம்:சைவமும் தமிழும்.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 சைவமும் தமிழும் பகைசேர் மதன்பூச் சூடல்அன்றிப் பதப்பூச் சூடப் பார்த்தறியேன் குகைசேர் இருட்பூங் குழலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே (2) என்பது ஒரு பாடல். ஆலம் இருந்த களத்தழகர் அணிசேர் ஒற்றி ஆலயத்தார் சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது கால நிரம்ப அவர்புயத்தைக் கட்டி அணைந்த தில்லையடி கோல மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே (15) என்பது மற்றொரு பாடல். வெற்ைைப வளைத்தார் திருஒற்றி மேவி அமர்ந்தார் அவர்எனது கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பதல்லால் சிற்ப மணிமே டையில்என்னைச் சேர்ந்தார் என்ப தில்லையடி கொற்பை அரவின் இடையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே (23) என்பது பிரிதொரு பாடல். பாடல்கள் யாவும் குறையை எவர்க்குக் கூறுவனே என்று முடிகின்றன. இவை தவிர நற்றாய் நலத்தல் என்ற துறையில் (85) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல்களும் புணராவிரகு பொருந்துறு வேட் கையின் இரங்கல் என்ற துறையில் (85, 30பாடல்களும், 'தலைவி இரங்கல்’ என்ற துறையில் (88) அறுசீர்க்