பக்கம்:சைவமும் தமிழும்.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 505 கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல்களும் அருள் மொழி மாலை (95) என்ற பெயரில் திருவொற்றியூர் பற்றி அறுசீர்க் கழிநெடிலடி விருத்த யாப்பில் அமைந்த 31 பாடல் களைக் கொண்ட ஒருசிறு பிரபந்தமும் (96), உள்ளன. இத்திருமுறையில் அகப்பொருட் பதிகங்கள் மட்டிலும் 23 உள்ளன. இங்கிதமாலை (98) என்ற ஒரு பிரபந்தம் உள்ளது. இத்திருமுறையில். இங்கித மாலை கலைமகள் வாழ்த்தாக ஒரு வெண்பாவும், காப்பாக ஒர் அறுசீர்கழிநெடிலடி விருத்தமும், பாடாண் திணையின் கடவுண்மாட்டு மானிடப்பெண்டிர் நயந்த பக்கம் என்ற தலைப்பில் (வினா-விடையாக) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் 165 பாடல்களும் கொண்டது. எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடல். கற்றைச் சடையீர்! திருவொற்றிக் காவல் உடையீர்! ஈங்கடைந்தீர்; 'இற்றைப் பகலே நன்றென்றேன்'; 'இற்றை இரவே நன்றெமக்குப் பொற்றைத் தனத்தாய் கையமுதம் பொழியாது அலர்வாய் புத்தமுதம் இற்றைக்கு அளித்தாய்' என்கின்றார்; இதுதான் சேடி என்னேடி (130) எல்லாப் பாடல்களும் இதுதான் சேடி என்னேடி என்ற தொடரால் இறுகின்றன. மேலும் இத்திருமுறையில் இராமநாமப் பதிகம் (10), 'வீரராகவர் போற்றிப்பஞ்சகம் (102), இரேணுகை தோத்திரம் (103' என்ற தோத்திரப்பதிகங்களும் அடங்கி யுள்ளன. 32. இது சென்னை ஏழுகின்று இடத்தில் உள்ள இரேணுகா தேவியின் மீது அமைந்தது. அன்பர் ஒருவர் வேண்டுகோளுக் கிணங்க அருளிச் செய்தது.