பக்கம்:சைவமும் தமிழும்.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 சைவமும் தமிழும் மூன்றாம் திருமுறை இதில் மூன்று பெரிய தனிப்பாடல்களும், மூன்று தனிப் பிரபந்தங்களும், ஐந்து பதிகங்களும்; சில தோத்திரங்களும் அடங்கியுள்ளன. - . . . . - (1) தனிப்பாடல்கள் (i) திருவடிப்புகழ்ச்சி: இதில் காப்பாக ஒரு நேரிசை வெண்பாவும் நூற்றுத் தொண்ணுாற்றிரு அறுசீர்க்கழிநெடி லடி ஆசிரிய விருத்தத்தில் ஒரு பாடலும் அடங்கியுள்ளன. (ii) விண்ணப்பக் கலிவெண்பா. இதில் காப்பாக ஒரு நேரிசை வெண்பாவும் 417 கண்ணிகளடங்கிய ஒரு கலிவெண்பாவும் அடக்கம். r (iii) நெஞ்சறிவுறுத்தல்: இதில் காப்பாக இருகுறள் வெண்பாக்களும் 703 கண்ணிகளையுடைய ஒரு கலிவெண் பாவும் அடங்கியுள்ளன. (2) தனிப்பிரபந்தங்கள் (4) சிவநேச வெண்பா. இந்தவெண்பாப் பிரபந்தத்தில் 102 நேரிசை வெண்பாக்கள் அடங்கியுள்ளன. (5) மகாதேவமாலை: இதில் காப்பாக அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஒன்றும், எண்சீர்க் கழிநெடிலடி விருத்தங்கள் நூறும் அடங்கியுள்ளன. இதில் ஒரு சில பாடல்களைக் காட்டுவேன். . இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி இயல்புருட னாய்க்கால பரமு மாகிப் பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற