பக்கம்:சைவமும் தமிழும்.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 507 அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும் அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே (7) மலைமேலும் கடல்மேலும் மலரின் மேலும் வாழ்கின்ற மூவுலகின் வயங்கும் கோவே நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக் கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும் கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும் தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும் தருமன்பின் மேலும்வளர் நாண்மேய்த் தேவே (21) மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை மயலேறி விருப்பேறி மதத்தி னோடு பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேயேறி நலிகின்ற பேதை யானேன் வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல் மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார் முத்தேறி உயிர்க்குயிராம் நிறைந்த எங்கள் உடையானே இதுதகுமோ உணர்கி லேனே (74) (6) திருவருண்முறையீடு: இது கட்டளைக் கலித்துறை யாப்பாலான 232 பாடல்களைக் கொண்டது. அனைத்தும் உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிப் பிழம்புகள். சிலவற்றைக் காட்டுவேன். நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு தான்படு மோசொல்லத் தான்படு - மோஎண்ணத் தான்படுமோ காண்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன் ஏன்படு கின்றனை என்றிரங் காய்என்னில் என்செய்வனே (9)