பக்கம்:சைவமும் தமிழும்.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 சைவமும் தமிழும் நடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும் திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்ப்வையேல் - விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையான் இடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே (41) வாய்மூடிக் கொள்பவர் போலேனன் உள்ளத்தை வன்துயராம் பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச் சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டும் திகழ்முலையைத் தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே (62) சேல்வரும் ஏர்விழி மங்கையங் காஎன் சிறுமைகண்டால் மேல்வரு நீவரத் தாழ்ந்தாலும் உன்றன் வியன்அருட்பொற் கால்வரு மேஇளங் கன்றழத் தாய்பசுக் காணின்மடிப் பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே (80) சொற்றுணை வேதியன் என்னும் பதிகச் சுருதியைநின் - பொற்றுண்ை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே நற்றுனை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக்